• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

July 2, 2020 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கோவையில் கொரோனாவால் 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 337 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நோய் தொற்று உறுதி செய்யப்படுபவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் கீரின்பீல்டு பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக
பெற்று வந்தார்.

இந்நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.மேலும் இவருக்கு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க