June 29, 2020
தண்டோரா குழு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோவை குற்றால வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மலைப்பாம்பை துண்புறுத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
கொரோனா ஊரடங்கால் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை குற்றால வனப்பகுதிக்குள் காரில் சென்ற இளைஞர்கள் சிலர் வனப்பகுதியில் காரை நிறுத்தி அங்கிருந்த மலைப்பாம்பை பிடித்து துன்புறுத்தும் விடியோ காட்சி டிக்டாக்கில் வைரல் ஆனாது.
இதையடுத்து பூளுவாம்பட்டி வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக வனப்பகுதிக்குள் புகுந்து மலைப்பாம்பை துன்றுபுறுத்திய நரசிபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் (25), விஜய் (27) உள்ளிட்ட ஆறு இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
வைரல் ஆகும் வீடியோ குறித்து பேசிய வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது,
சமீப காலமாக டிக்டேக் போன்ற செயலிகளில் வனவிலங்குகளை துன்புறுத்தும் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட கோவை குற்றால வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்தி அதை டிக்டேக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது அபராதம் மட்டுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.