• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜுலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து

June 27, 2020 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை முதல் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 4 சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத்தொகையும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுக்கான தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோயம்புத்தூர் – காட்பாடி, கோயம்புத்தூர் – மயிலாடுதுறை,திருச்சி – நாகர்கோவில், கோயம்புத்தூர் – அரக்கோணம்
இடையே சிறப்பு ரயில்கள் இயக்கபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க