• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை எம்.ஜி.ஆர் காய்கனி மொத்த வியாபார மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

June 27, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.10 மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.காய்கனி மொத்த வியாபார மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெங்காயம், தக்காளி ஆகிய மொத்த வியாபார கடைகளை மார்க்கெட்டிற்கு எதிரேயுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டும், மீதமுள்ள காய்கனி மொத்த வியாபாரம் பழைய எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிலேயே செயல்பட்டு வந்தது. இங்குள்ள கடைகளில் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமலும், வியாபாரிகள் முகக்கவசம் அணியாமலும், மார்க்கெட் பாதைகளிலும், மழைநீர் வடிகால் அமைப்புகளின் மீதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கனி மூட்டைகளை வியாபாரம் செய்து கூட்ட நெரிசலை உண்டாக்கி கொரோனா தொற்று பரவ காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இந்த மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு முதல் கட்ட கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு இன்று (26.06.2020) முதல் எம்.ஜி.ஆர் மார்க்கெட் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்கள். இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன், செயற்பொறியாளர் சரவணக்குமார், சுகாதார அலுவலர் ஆர்.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க