• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

June 26, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1957 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு
எண்ணிக்கை 49690 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 46 பேர் உயிரிழந்தனர். இதன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 42, 357 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 89 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,317 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க