• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம்

June 26, 2020 தண்டோரா குழு

சாத்தான்குளம் சித்திரவதை மரணங்களை கண்டித்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா நேற்றைய தினம் அறிவித்ததின் பெயரில் இன்று தமிழக முழுவதும் காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை நகரில் ரங்கே கவுடர் வீதி ,செல்வபுரம், காந்திபுரம் ,சிங்கநல்லூர் உட்பட பெரும்பாலான மளிகைகடைகள் , டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள் அடைக்கப்பட்டிருக்கிறது.வணிகர் சங்க பேரமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹோட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டது. அதே போல் மருந்து கடைகளை மதியம்12 மணி வரை அடைக்கவும் மருந்து வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து அடைக்கப்பட்டுள்ளது.கோவையில் மட்டும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மரணங்களை கண்டித்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த கடையடைப்பு போராட்டம் நடந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க