• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் புதிய உச்சம்; இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று – 33 பேர் உயிரிழப்பு

June 24, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,654 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 33 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்,இன்றைக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 32,079 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,76,431 ஆக உயர்ந்துள்ளன.

மேலும் படிக்க