• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 292 ஆக உயர்வு

June 23, 2020 தண்டோரா

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 52 வயது பெண்,கோவை வெள்ளலுார் மத்திய அதிவிரைவுப்படையில் பணியாற்றி வரும் 50 போலீஸ், பெங்களூரு விமானத்தில் வந்த சூலுார் விமானப்படை தளத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், ரத்தினபுரியை சேரந்த 40 வயது ஆண், டில்லியில் இருந்து விமானத்தில் வந்த செட்டிபாளையத்தை சேர்ந்த 30 மற்றும் 19 வயது இளைஞர்கள், குஜராத்தில் இருந்து வந்த பீளமேட்டை சேர்ந்த 29 வயது இளைஞர், ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த 72 வயது பெண், தெலுங்கு பாளையத்தை சேர்ந்த 32 வயது ஆண் பெண் இருவர், ஒண்டிப்புதுாரை சேர்ந்த 39 வயது ஆண், காந்திபூங்காவை சேர்ந்த 56 வயது ஆண், குருடம்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், சூலுார் குமரன் நகரை சேர்ந்த 54 வயது ஆண், பெ.நா.பாளையத்தை சேர்ந்த 49 வயது ஆண், குனியமுத்தூரை சேர்ந்த 40 வயது ஆண், கரும்புக்கடையை சேர்ந்த 55 வயது ஆண், செல்வபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பொள்ளாச்சியை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம்,கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம்,கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 ஆண்கள்,4 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க