• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலைக்கு ஆட்களை எடுத்த தனியார் நிறுவனம் சீல்

June 23, 2020 தண்டோரா குழு

சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலைக்கு ஆட்களை எடுத்த தனியார் நிறுவனம் அரசு அதிகாரிகளால் மூடப்பட்டது.

கோவை கணபதி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் (எம் இந்தியா ஆன்லைன் டெவலப்பர்ஸ்) நிறுவன வேலைக்கு ஆட்களை தேவை என்றும் நேர்முக தேர்வு உள்ளது என்றும் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக கோவையில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்விற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் தேர்வு நடத்தப்பட்டதென வடக்கு வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நெரில் சென்ற வட்டாட்சியர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் உடனடியாக நேர்முக தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் அங்குள்ளவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டார். அதன் பின் அந்த நிறுவனம் மூடபட்டு நோட்டிஸ் ஒட்டபட்டது. ஊரடங்கு நேரத்தில் இது போன்று நிறுவனங்கள் ஆட்களை அழைத்து நேர்முக தேர்வு நடத்த கூடாது என்றும் வட்டாட்சியர் கூறினார்.

மேலும் படிக்க