• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் ஆணவ கொலை செய்ய திட்டமா? – கோவையில் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி ரோடு இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (35) இந்து முதலியார் சமூகத்தை சேர்தவரும், திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தராஜ் என்பவரின் மகள் சக்தி தமிழினி பிரபா (25) தேவேந்திரகுல வேளாளர் சமூகதை சார்ந்த இவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளாக இருப்பதாலும் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு வந்தது தற்போது தெரியவதுள்ளது.

இதற்கிடையில் அப்பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில் கார்த்திகேயன் மற்றும் பிரபா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 5-6-20 அன்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையாக திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த திருமண தகவல்கள் முறையாக இரண்டு வீட்டு பெற்றோருக்கும் தெரிவித்ததில் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்து விட்டனர். மணமகனின் பெற்றோர் இந்த திருமணத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டதையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வடவள்ளி சாலை இடையர்பாளையத்தில் கார்த்திகேயனின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெண்ணின் பெற்றோர்,உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை வழுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருச்சிக்கு காரில் கடத்தி சென்று ஆணவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக கூறும் கார்திகேயன் தரப்பு,பெண்ணை கடத்தி சென்ற அவரின் பெற்றோரை கைது செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. கார்த்திகேயனின் தாயார் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க