June 19, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆர்.ஜி.புதுார் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உள்பட மொத்தம் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் குடியிருப்பு பகுதியான, ஆர்.ஜி.புத்தூரில் ஏற்கனவே 23 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, 23 வயது ஆண்கள் மூன்று பேர், 8 மற்றும் 9 வயது சிறுவர்கள் இருவர், 45 வயது ஆண், 29 வயது ஆண் என மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பீளமேடு, லால்பகதுார் காலனியை சேர்ந்த 98 வயது மூதாட்டி, ராஜா வீதியை சேர்ந்த 45 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் வெளியூர்களுக்கு எங்கும் செல்லாமல் கோவையிலேயே இருந்து பாசிட்டிவ் ஆனவர்கள். அதைப்போல் தீத்திபாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், (வெளிமாவட்டத்தில் இருந்து கோவை வந்து பாசிட்டிவ் ஆனவர்).சிறுமுகையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, காரமடையை சேர்ந்த 59 வயது பெண், புங்கம்பாளையத்தை சேர்ந்த 18 வயது ஆண், சொக்கன்புதுார் ரோட்டை சேர்ந்த 28 வயது ஆண்,(கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்து பாசிட்டிவ் ஆனவர்கள்).ஆகிய 7 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து,பாதிக்கப்பட்ட 14 பேரும் இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்,கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.தற்போது இ.எஸ்.ஐ மருத்துானையில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.