• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று புதிதாக 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 41 பேர் உயிரிழப்பு

June 19, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 2,115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 2,115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,075 பேர்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,322 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 41 பேர்
கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில்,இன்று மொத்தம் 1,635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 30,276 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்,
இன்று 27,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 8,27,980 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 23,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் படிக்க