• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 10 ஆம் இடம்

June 19, 2020 தண்டோரா குழு

நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அரசின் மத்திய மனித வளத்துறை, 2020-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள 1,659 கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.கற்றல்- கற்பித்தல்,பாடத்திட்டம் உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனம் குறித்த சமூக மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை முன்வைத்து அதன் அடிப்படையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வெளியிட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி,மற்றும் கல்லூரியின் இயக்குனர் பாலசுப்ரமிணியன், செயலாளர் யசோதாதேவி,முதல்வர் நிர்மலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எங்கள் கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், கற்பித்தல்,மற்றும் கற்றல் முறை என பல்வேறு சிறந்த கட்டமைப்புகளால் தேசிய அளவில் பத்தாம் இடத்தில் வந்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் கூடுதல் கவனங்கள் செலுத்தி மேலும் தர வரிசையில் முன்னேற்றம் காண கல்லூரியின் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தேசிய அளவில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளதில் மகிழ்ச்சியளிப்பதாகவும், இது இக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்குப் பெருமை அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க