• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 18, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆர்.ஜி.புதுாரை சேர்ந்த 27 வயது இளைஞர் அண்மையில்கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து இளைஞர் வசித்து வந்த பகுதி,கொரோனா கட்டுப்படுத்துதல் மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனையில், அப்பகுதியில் வசிக்கும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவில் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,நீலகிரியில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண், தெலுங்குபாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண், போத்தனுாரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, சிதன்புரத்தை சேர்ந்த 39 வயது ஆண், கணுவாயை சேர்ந்த 65 வயது மூதாட்டி, சமத்தூரை சேர்ந்த 70 வயது முதியவர், சுங்கம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர், சுபிகவுண்டன்புதுாரைச் சேர்ந்த 82 வயது முதியவர், சரவணம்பட்டியை சேர்ந்த 27 வயது இளைஞர், உடையாம்பாளையத்தை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு இன்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதைப்போல், சென்னையில் இருந்து வந்த, உடையாம்பளையம் மற்றும் நடுபுனி பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் பெண் குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவகள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் #Quarantine_zone உருவாகியது. மொத்த பாதிப்பு – 211பேர், குணமடைந்தது – 161பேர்,சிகிச்சையில் – 48 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க