June 18, 2020
தண்டோரா குழு
கோவை ஆர்.ஜி.புதூர் பகுதியில் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.தொற்று காரணமாக தனியார் மில் மூடப்பட்டுள்ளது
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கோவையில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.இதில் ஆர்.ஜி.புதூர் பகுதியில் மட்டும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.சென்னையில் இருந்து கோவை வந்த ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் கொரோனா தொற்றால் கடந்த 14 ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 39 முடிவுகள் வரப்பெற்றதில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இதனிடையே உயிரிழந்த இளைஞரின் தாய் மற்றும் சகோதாரர் பணியாற்றிய சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சிஎன்வி ஸ்பின்னிங் மில்லிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த மில் மூடப்பட்டு,அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள 220 பேருக்கு இரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.