• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சீன கொடியை கிழித்து, சீன போனை உடைத்த பாஜகவினர்

June 17, 2020 தண்டோரா குழு

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த சம்பவத்தில் சீன ராணுவத்தினரும் பலியாகினர்.

இந்த நிலையில் மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை பஜக அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட பாஜகவினர் இறந்த வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சீன ராணுவத்தினரின் அத்து
மீறும் செயலை கண்டிக்கும் விதமாக சீன வரை படம் மற்றும் சீன தேசிய கொடியை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சீன கொடி மற்றும் வரைபடத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், பாஜகவினர் சீன செல்போனை தரையில் வீசி உடைத்தனர். இதனிடையே இந்து மக்கள் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சீன கொடியை கிழிக்க முயன்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க