June 16, 2020
தண்டோரா குழு
கோவையில் கோவில் நடைகளை திறக்க வலியுறுத்தி ஹிந்து ஜனநாயக முன்னணியினர் சங்கு ஊதியும், மனிஅடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக முழுவதும் கொரனா நோய் தொற்று காரணமாக கோவில் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டது. தற்போது டாஸ்மாக் கடைகள், வணிக வளாகம் உள்ளிட்டவைகளுக்கு தளர்வுகள் விடப்பட்டு திறக்கப்பட்டன. இதே போல் கடந்த மூன்று மாதங்களாக மூடி கிடக்கும் இந்து ஆலயங்களை மக்கள் வழிபாட்டிற்காக திறக்க கோரியும், நான்கு கால பூஜைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு யாக வேள்விகள் நடத்தப்பட வேண்டும் என்றும்,அன்னதானம் மற்றும் கூட்டு பிரார்த்தனையை தவிர்க்க வலியுறுத்தியும்,தமிழ்நாடு முழுவதும் இன்று ஹிந்து ஜனநாயக முன்னணி இயக்கத்தின் சார்பில் ஆலயங்கள் முன்பு அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை ஹிந்து ஜனநாயக முன்னணி சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில் முன்பு அரசுக்கு ஒலி எழுப்பும் விதமாக சங்கு ஊதியும், மணி அடித்தும், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.