June 16, 2020
தண்டோரா குழு
கோவை தென்னம்பாளையம் பகுதியில் இளைஞரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை துடியலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் மதன்குமார். ஆட்டோ ஓட்டுநரான மதன்குமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இந்துமுன்னணி அமைப்பிலிருந்து விலகி விஎச்பி அமைப்புக்கு சென்றுவிட்டார். இதனால் இந்து முன்னணி அமைப்பிலுள்ள சக்தி உட்பட மூன்று பேர் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதன் குமாரின் குடியிருப்பு பகுதிக்கு வந்த சக்தி உட்பட நான்கு பேர் மதன்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் மதன்குமார் புகார் அளித்தார். இதனிடையே சக்தி கத்தியைக் காட்டியை மிரட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.