June 16, 2020
தண்டோரா குழு
பி எஸ் ஜி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்யப்படமாட்டாது.
பி.எஸ்ஜி. மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள இந்த மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் இச்சேவை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றை கண்டறிய மேற்கொள்ளப்படும் சளி பரிசோதனை உள்ளிட்ட எந்த பரிசோதனையும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படமாட்டாது.
முன்னர் வந்த செய்தியில் கொரோனா சளி பரிசோதனை வீட்டில் வந்து எடுக்கப்படும் என்று தவறுதலாக செய்தி பிரசுரித்தமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.