• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் வீடுதேடி சென்று இரத்த பரிசோதனை மாதிரி எடுக்கும் திட்டம் அறிமுகம்

June 15, 2020 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் வீடுதேடி சென்று இரத்த பரிசோதனை மாதிரி எடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது .தற்போது தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரானா வைரசினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.வீட்டில் இருந்து வெளியே மக்கள் செல்ல முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு பிஎஸ்ஜி மருத்துவமனை மக்களுக்காக வீட்டிற்கே சென்று இரத்த பரிசோதனை மாதிரிகளை சேகரிக்கும் புதிய “மித்ரா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன் கூறுகையில்,

நோயாளிகள் ரத்த பரிசோதனை மேற்கொள்ள போக்குவரத்து மூலம் மருத்துவமனைக்கு செல்லும் போது தற்போது உள்ள இந்த கொரனா நோய் தொற்றும் அபாயம் இருக்கக்கூடும். இரத்த பரிசோதனை செய்ய மருத்துவமனையை நாட வேண்டிய அவசியம் தேவையில்லை.தாங்கள் வீடு தேடி வரும் நண்பன் என்று சொல்லக்கூடிய மித்ரா என்னும் லேப் சர்வீஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது கோவையில் முதன்முறையாக இம்மாதிரி ஆய்வகத்தை பி.எஸ்.ஜி மருத்துவமனை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இரத்தப்பரிசோதனை தேவைப்படுபவர்கள் 8220013330 என்ற எண்ணுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவமனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அதன் முடிவுகள் வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போது இந்த சேவை அளிக்கப்படும்.

மேலும் படிக்க