June 15, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,257 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய இன்று ஒரேநாளில் 44 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 797 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,344 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7.29 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1.85 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.