• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற வாலிபர்

June 15, 2020 தண்டோரா குழு

கோவையில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த திலகவதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த பத்மநாபன் என்பவரும்,திலகவதியும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். பத்மநாபனும் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.

இந்தநிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலகவதியை, பத்மநாபன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திலகவதி தயக்கம் காட்டி வந்ததால், அவர் மீது சந்தேகம் கொண்ட பத்மநாபன், சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திலகவதி மாயமானதாக கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, தகரகொட்டாய் என்கிற இடத்தில் இருவரது சடலங்களை போலீசார் மீட்டனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க