• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் நீர் திருட்டை தடுக்க ஆட்சியரிடம் மனு

June 15, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நொய்யல் ஆற்றில் நீர் திருட்டை தடுக்கவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதியை தூர்வாரும் பணிகள் அண்மையில் தமிழக அரசு 230 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நடத்தப்படும் நீர் திருட்டை தடுக்கவும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றை பாதுகாக்கவும் அங்கு நடைபெறும் நீர் திருட்டை தடுக்கவும் கோவை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க