• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 கொரோனா தொற்று – 38 பேர் உயிரிழப்பு

June 14, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும்,வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை இல்லாத அளவாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 1,138 பேர் கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க