June 13, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு கர்ப்பிணி பெண்கள்உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளனர் என மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.அதில் கர்ப்பிணி வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிக பிரசவ வார்டு மூடப்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலிர்கள், மருத்துவ ஊழியர்கள் உட்பட 52 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.கோவையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 பெண்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த 32 வயது பெண்ணிற்கு கருவிலே குழந்தை உயிரிழந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாயை காப்பாற்றியுள்ளனர்,அதன்பின்னர் எடுக்கப்பட்ட பதிசோதனையில் பாசிடிவ் என வந்ததை அடுத்து சிகிச்சை வழங்கிய மருத்துவரக்ள் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். விருதுநகரை சேர்ந்த 19 வயதுடைய பெண் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என வந்ததை அடுத்து சிகிச்சை அளித்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சிகிச்சைக்காக வந்த கோவை கணபதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கு பரிசோதனை கொரோனா பாசிடிவ் என தெரியவதுள்ளது.திருப்பூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் இதயத்தில் வாழ்வு பிரச்சனை என்பதால் எடுக்கப்பட்ட பரி
சோதனை பாசிடிவ் என தெரியவந்துள்ளது. கோவை 30 வயதுடைய மார்பக புற்றுநோய் அனுமதிக்கப்பட்டள்ள பெண் ஒருவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.கோவை வெள்ளகிணறு 69 வயதுடைய ஆண் குடல் பிரச்சனை வந்தவருக்கு பாசிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது.
அதைப்போல் கோவை ரத்தினபுரி சேர்ந்த 74 வயதுடைய பெண் குடல் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் காது தொண்டை மூக்கு பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு -சிகிச்சை அளித்த 6 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
திருப்பூர் அவினாசி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஆண் ( HIV) மூச்சு திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா பாசிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது. வேறு வேறு நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்ட மொத்தம் 9 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.