• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

June 13, 2020 தண்டோரா குழு

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் அனைத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அலுவலகங்கள் சுத்தப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைபடுத்தும் பணி இன்று நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இவ்வாறு இயங்கும் அரசு அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக கடந்த வாரம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி , இன்று அனைத்து அரசு அலுவலகங்களையும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அனைத்து அறைகளையும் தூய்மைப்படுத்திய பின்னர், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அறைகளின் கதவுகள், ஜன்னல்கள், இருக்கைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 10 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க