• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரேஸ்கோர்ஸில் ரூ.40 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்கும் பணி துவக்கம்

June 12, 2020 தண்டோரா குழு

சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும், விரைவில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வருமெனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்பில் மாதிரி சாலை அமைப்பதற்கான பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தயசாலை பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்படும்.பூங்கா, விளையாட்டு உபகரணங்கள்,ஸ்மார்ட் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் பல்வேறு அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் செய்து தருகிறார். கோவை 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பிருந்த அரசு எதுவும் செய்யவில்லை, இதனை பொறுக்க முடியாமல் வரும் விமர்சனங்களை புறந்தள்ளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.தமிழகத்தில் சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும், விரைவில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க