June 12, 2020
தண்டோரா குழு
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலராக பிப்ரவரி 17, 2019 முதல் பதவியில் இருந்த வந்த பீலா ராஜேஷ் பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவர் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,புதிய சுகாதார செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஜெ.ராதாகிருஷ்ணன் முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் பதவியை மேலும் உத்தரவு வரும் வரை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
ராதாகிருஷ்ணன் 2012 முதல் 2019 பிப்ரவரி வரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார். பின்னர் போக்குவரத்து செயலாளராக மாற்றப்பட்டார்.டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், நெருக்கடி நிலைகளை கையாளும் நிபுணராக நன்கு அறியப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல பேரழிவுகளின் போது அவரை முன்னணி பணியில் ஈடுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.