June 11, 2020
தண்டோரா குழு
கோவையில் சென்னையில் இருந்த வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் வடவள்ளி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் 29 வயது பெண் ஆகியோருக்கு உறுதியானது. விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்ததால் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணிற்கு கொரோனா உறுதியானது. சென்னையில் இருந்து கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த நபரின் மனைவிக்கும்(32) கொரோனா உறுதியானது. இவர்கள் நான்கு பேரும் இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.