• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலையோர மக்களை நம்பி வைக்கோல் குதிரைகளை விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்

June 11, 2020 தண்டோரா குழு

சாலையோர மக்களை நம்பி, வைக்கோலினால் செய்யபட்ட குதிரைகளை செய்து விற்பனை செய்து வருகிறார் வடமாநில தொழிலாளர்.

பரபரப்பான சூழலில் காலை, மாலை என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்ற மேட்டுப்பாளையம் சாலையின் ஓரங்களில்,பல்வேறு சிறு,குறு விற்பனையாளர்கள் பல்வேறு கடை வைத்து பிழைப்பு நடத்தி விழுவதை நாம் தினம், தினம் கானும் காட்சிகளில் ஒன்று. உதாரணமாக மண்பாண்ட விற்பனையாளர்கள், பழ விற்பனையாளர்கள், காய்கறிகள் விற்பனையாளர்கள் பொம்மை விற்பனையாளர்கள்,போன்ற பல்வேறு தொழிளாலர்கள் சாலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம், சாலை வடமதுரை பகுதியில் வட மாநில தொழிலாளர் ஒருவர் வைக்கோலை வைத்து விதவிதமான குதிரைகளை செய்து விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தார். கலைநயமிக்க குதிரையின் விற்பனை காட்சியினை கண்ட நமக்கு இந்த குதிரை மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் வைக்கோலினால் செய்ய பட்டது என்பதை நம்மால் நம்ப முடியாத நிலை ஏற்ப்பட்டது. மேலும் இந்த கலை பற்றி அவரிடமே கேட்ட பொழுது துளியும் அவருக்கு தமிழ் தெரியவில்லை. மொழி தெரியாத மாநிலத்தில், வயிற்று பிழைப்புக்காக போராடிவருகின்றதை எண்ணும் போது, கொரோனா எனும் வைரஸ் எப்படி புரட்டி போட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.அவரிடம் இது குறித்து கேட்ட போழுது நம்மிடம் புரிய வைக்க போராடி புரிய வைத்தார், தான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் திருமனணம் ஆகி மனைவியுடன் பிழைப்புக்காக தமிழகம் வந்தாதவும், கோவை மாவட்டத்திற்க்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததாகவும், ஏங்கேயும் சரியாக வாழ முடியாமல் தவித்து வந்ததாகவும், இந்த சாலையில் உள்ள உணவகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்ததாகவும், இது பொழுது போக்கிற்காக இது போன்ற குதிரைகளை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தான் இது போன்ற குதிரைகளை செய்தால் தனது மனைவி அதனை விற்பனை செய்து விடுவார் என தெரிவித்தார்.

உணவகங்களில் உணவருந்த வருகின்ற வாடிக்கையாளர்கள், 800 முதல் 1000வரை இந்த குதிரைகளை வாங்கி சென்றனர் இதனால், தினசரி வருமானம் ஏதோ ஒரு அளவிற்கு தங்களுக்கு போது மான அளவாக இருந்ததாகவும், ஆனால் தற்பொது கொரோனா வைரஸ் எனும் கொடிய நோயின் காரணமாக வேலையின்மையினால் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளதாகவும், இதனால் தற்போது இந்த குதிரைகளின் விற்பனை யை மட்டுமே நம்பி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்போது வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் 300முதல் 500வரையே விற்பனையாவதாக தெரிவித்தார். கட்டுபிடி ஆகாக விலை என்றாலும் குழந்தையின் பால், உணவுக்காக விற்பனை யானால் போதும் என விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். யாரும் எதிர்பாராத வகையில் பரவிய வைரஸ் தொற்றானது தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட இது போன்ற அன்றாட தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்குகையை ஒரு புரட்டு புரட்டி, போட்டுள்ளது என்பதை இவர்களை போன்றவர்களிடம் பேசும் போது புரிகின்றது நமக்கு.

மேலும் படிக்க