• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நத்தை வேகத்தில் நடைபெறும் மேம்பாலபணிகள் -திக்குமுக்காடும் வாகன நெரிசல்

June 11, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில், வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக அனைத்து சாலைகளிலும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது, இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், 65கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டபட்டு வருகின்றது.பொதுவாகவே மேட்டுப்பாளையம் சாலை, காலை, மாலை வேலைகளில் சற்று பரபரப்பாக கானபடும், இந்த நிலையில் மேம்பால பணிகள் வேறு நடைபெற்று வருகின்ற காரணமாக வாகன நெரிசல் அதிக அளவில் காணபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை வாகன நெரிசலில் சிக்கி தவித்த அவசர ஊர்தி வாகனம் ஒன்று செல்ல வழியின்றி திக்குமுக்காடியது அனைவரையும் சற்று பதற வ வைத்துள்ளது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக, சாலை ஓரங்களில் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்கி அவசர ஊர்தி செல்ல வழி அமைத்து தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தினம் தினம் பல்வேறு, சோதனை களுக்கு உள்ளாகி வருகின்ற கவுண்டம்பாளையம் பகுதியின் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட்டால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் நிலை உள்ளது எனவே இந்த பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த சாலையை பயண்படுத்தும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க