• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை டிகே மார்க்கெட்டில் 88 காய்கறி கடைகள் அகற்றம்

June 11, 2020 தண்டோரா குழு

கோவை டிகே மார்க்கெட்டில் 88 காய்கறி கடைகள் அகற்றம்

கோவையில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த 88 காய்கறி கடைகள். உயர்நீதிமன்ற உத்திரவின்படி போலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் செயல்பட்டு கொண்டுவந்த காய்கறிகள் விறபனை மார்க்கட் அரசு பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட அரசு வழிவகை செய்தது, தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பேருந்துகள் இயங்க துவங்கியதால் தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு ஏற்க்கனவே இயங்கிவந்த கோவை தியாகி குமரன் மார்க்கட் 50 சதவிகித கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மார்க்கட்டில் நடைபாதையில் கடை நடத்திவரும் வியாபாரிகள் கடை நடத்த அனுமதி அளிக்காததால், அதை நம்பி பிழப்பை நடத்திவரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகவும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும், சரக்குகளை கடைகளுக்கு மார்க்கட்டில் உள்ள கடைகளுக்மும் கொண்டுசேர்க்கும் தொழிலாளர்களுக்கும், ஈடையூராக இருந்த 88 தரை கடைகள் என்று அழைக்கப்படும் நடைபாதை கடைகள் உயர்நீதி மன்ற தீர்ப்பையடுத்து. மாநகராட்சி அதிகாரிகள் போலிஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து இங்கு கடைகள் நடத்திவந்த வியாபாரிகள் கூறுகையில்,

கொரானா காலத்தில் தற்காலிக கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் நாங்கள் காலம் காலமாக நடத்திவந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதால் எங்களின் 88 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக அரசு எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு, கடைகளை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும். என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க