June 10, 2020
தண்டோரா குழு
COIMBATORE என்பதை KOYAMPUTHTHOOR என்று மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன.ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன்,எழுதவும்படுகின்றன. இனி அதை விடுத்தது ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வலியுறுத்தி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, “தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்” என்ற அறிவிப்பாணையின் மூலம், சுமார் 1018 ஊர்ப்பெயர்களின் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்,கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் *COIMBATORE* என்று உள்ளதை இனி *KOYAMPUTHTHOOR* என மாற்றப்பட்டு உள்ளது