June 10, 2020
தண்டோரா குழு
கோவை பெரியார் படிப்பகத்தில் இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத தலைநகர் மின்னபொலிசில் கடந்த மே 25ம் தேதிப்ஜார்ஜ் பிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் போலீஸ் அதிகாரி டெரொக் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தைத் தன் கால் முட்டியால் டெரொக் அழுத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.ஜார்ஜின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலுக்கு முடிவு கட்டவேண்டும்,அமெரிக்காவிலுள்ள அதிகார வரம்பை மாற்றியமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இனப் பாகுபாட்டால் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அனைத்து இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டது. இதில் த.பெ.தி.க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்,ஆதிதமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,திராவிட விடுதலை கழக கோவை மாநகர மாவட்ட தலைவர் நேருதாஸ்,பி.யு.சி.எல் வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.