June 10, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கக் கோரி கோவையில் இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என ஐந்தாம் கட்டம் வரை ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தலைவர்களுடன் தொடர்ந்து வருகிறது இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு இந்து முன்னணியின் மாநில நிர்வாகி குணா தலைமையில் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
பல்வேறு மாநிலங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தீவிர கடவுள் பக்தர்கள் இருந்தபோதும் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி தற்போது வரை கொடுக்க வில்லை எனவே உடனடியாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்து முன்னணி சார்பில் இந்த போராட்டம் மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.