• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 9, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில்,பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 36 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 21 பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இன்று 798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 18,325 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 13,219 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,21,171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க