• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகன கட்டணங்கள் கட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள்

June 9, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50 க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், 2021 ஆம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது, வாகனத்திற்கான தரச் சான்றிதழை பெறுவதற்கு வாகனங்களில் பொருத்தி உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் தர சான்றிதழை வழங்க வேண்டும், நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், கரோனா வைரஸ் காலத்தில் நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது, ஊரடங்கு முடியும்வரை வாகனங்களுக்கான பெரிமிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்களுக்கு 10 லட்சமும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டவர்களுக்கு 5 லட்சமும் உடனடியாக அரசு வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க