June 9, 2020
தண்டோரா குழு
வழிபாட்டு தளங்களை திறக்க கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கொரானா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வழிபாட்டுத் தளங்களை திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியி சார்பில் சிவத்திரு பிரசன்ன சுவாமிகள் தலைமையில் கோவை கோனியம்மன் கோவில் முன் ஆலயம் திறப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் பேசிய பிரசன்ன ஸ்வாமிகள்,
மதுக் கடைகள் நகைக் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை திறக்கும்போது வழிபாட்டுத் தலங்களை மட்டும் திறக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் மீண்டும் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.