June 8, 2020
தண்டோரா குழு
சிசிடிவி வைத்து தனது வீட்டை நோட்டமிடுவதாக கூறி,செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றவரை தீயணைப்பு வீரர்கள்.
காப்பாற்றினர்.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட அறிவொளி நகரில் வசித்து வரும் 35 வயதான மணிகண்டன் என்பவர், கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சுமதி மற்றும் பிரகாஷ் என்ற தம்பதியினருக்கும், இடையே இடப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு, சுமதி என்பவர், மனி கண்டன் மீது புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துகொண்டு வருகிறதாகவும் தெரிகிறது. இதற்கிடையில்,கடந்த 3 நாட்களுக்கு முன்புசுமதி தனது வீட்டில் சிசிடிவி கேமரா மாற்றி உள்ளார், கேமரா மாற்றியதால் மணிகண்டன் குடும்பத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், மணிகண்டன் தனது வீட்டு பாத்ரூம் சென்றால் சிசிடிவியில் தெரிவதாகவும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,மணிகண்டன் அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி, நின்று கொண்டு, சுமதி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வந்து மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கேட்டுக் கொண்டு வர வைத்து, அவரை கைது செய்து இது குறித்து விசாரணை நடத்த காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
பக்கத்து வீட்டுகாரர்களின் சண்டை காரணமாக செல்போன் டவர் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.