• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நர்சிங் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

June 8, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் 19 வயது மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல் தளமானது மூடப்பட்டது.இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 5ம் தேதி அன்று திருப்பூரில் இருந்து வந்துள்ளார். இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இன்று வெளியாயின. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தங்கியிருந்த செவிலியர் விடுதி தளமானது மூடப்பட்டது. அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாணவர்கள் இருக்கும் அறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அவருடன் இருந்த 40 செவிலிய மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி வார்டில் பணிபுரியும் ஊழியர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க