June 8, 2020
தண்டோரா குழு
கோவையில் உள்ள பெரிய ஹோட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 சதவீத இருக்கைகள் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, கோவையில் உள்ள பெரிய உணவகங்களில் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் கொண்டு அனைத்து வாடிக்கையாளர்க்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்துபின் உள்ளே அனுமதிக்க படுகின்றனர்.வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் வைத்தும்,கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க படுகின்றன. ஏசி ரூம்களை இயக்காமல். 50% இருக்கைகள் கொண்டுள்ளனர். டேபிள்களுக்கிடையில் சமூக இடைவெளி விட்டு அமர வைத்துள்ளனர்.அதே போல் ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தபடி உணவை பரிமாறி வருகின்றனர்.