June 7, 2020
தண்டோரா குழு
கோவையில் இதுவரை 22,872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையை பொறுத்தவரையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நீண்ட கோரிக்கைகளுக்கு பின்னர் மாவட்ட வாரியான கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெளியிட்டது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் கோவையில் இதுவரை இதுவரை 22,872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.