• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வேளாண் பல்கலையில் தானியங்கி கை சுத்திகரிப்பான்‌ திரவத்தை தெளிக்கும்‌ கருவி உருவாக்கம்!

June 6, 2020 தண்டோரா குழு

கோவை வேளாண் பல்கலையில்தானியங்கி கை சுத்திகரிப்பான் திரவத்தை தெளிக்கும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூரில் உள்ள பண்ணை இயந்திரவியல் துறையினரால்,தானியங்கி கை சுத்திகரிப்பான்
திரவத்தை தெளிக்கும் கருவி
உருவாக்கப்பட்டுள்ளது.தானியங்கி கை சுத்திகரிப்பான் திரவத்தை தெளிக்கும் கருவி பேட்டரியால் இயங்கும் தெளிப்பானின் இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைப்பு, கைகளை அருகில் கொண்டு சென்றாலே
சுத்திகரிப்பான் திரவத்தை கைகளில் தெளித்துவிடும், கலனை கைகளால் தொட வெண்டியதே இல்லை.

இக்கருவியை துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர் மற்றும் தலைவர்கள் அனைவர் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. துணைவேந்தர் கருவியை உருவாக்கிய பேராசிரியர்களைப் பாராட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுக்கு தேவைக்கெற்ப தயாரித்து வழங்க அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க