• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேருந்து நேரில் குறித்து முதல்வர் பழனிசாமிக்கு சிட்டிஷன் வாய்ஸ் கோவை கன்சியூமர் அமைப்பு கடிதம்

June 6, 2020 தண்டோரா குழு

சிட்டிஷன் வாய்ஸ் கோவை கன்சியூமர் என்விரான்மென்ட் சென்டர் சார்பில் பேருந்து நேரில் குறித்து முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

கொரானா நோய்தொற்று வேகமாக பரவுதல் குறித்தும் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளுக்கு அனுமதி அளித்துள்ளது பற்றியும் தங்கள் கவனத்திற்கு சில விஷயங்களை கொண்டுவர விரும்புகிறோம்.
கடந்த இரண்டரை மாத காலமாக மத்திய மாநில அரசுகள் கொரானா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் மேற்கொண்ட முழு ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் காரணமாக கொரானா நோய்த்தொற்று பரவல் பல நாட்களுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இதற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆனால் ஊரடங்கு நிபந்தனைகளில் பல தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்திய பிறகு நோய்த்தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்து இன்று நமது தமிழகம் கொரானா நோயாளிகள் எண்ணிக்கையில் நாட்டிலேயே இரண்டாமிடத்தில் உள்ளது. இது மிகவும் அபாயகரமான செய்தியாகும்.மேலும், தாங்கள் மிக நன்றாக அறிவீர்கள் கோயம்பேடு சந்தை மூலமாக பரவிய நோய்த்தொற்று இன்று சென்னையை மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் மிகவும் அதிகமாக பாதித்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இப்போது அரசு பொதுப் போக்குவரத்தில் பல தளர்வுகளை அறிவித்து ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களோடு பொதுப் பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது. இது விஷயமாக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக பெரும்பாலான கட்டுப்பாடுகளை பொதுப் போக்குவரத்து நிறுவனங்களான ஆட்டோ டாக்ஸி மற்றும் பேருந்துகள் நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. உதாரணமாக பேருந்தில் 37பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் உட்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது முழுமையாக பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன இந்தச் சூழ்நிலையில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில் பயணிகள் சரியான சமூக இடைவெளியை கடை பிடிக்க இயலாமல் கிடைக்கின்ற பேருந்தில் அடிதடி போட்டுக்கொண்டு கூட்டமாக ஏறிச் செல்கின்ற நிலைமை உள்ளது. இது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலையாக உள்ளது. தாங்கள் இது விஷயமாக உடனடியாக தலையிட்டு மேலும் அதிகப்படியான பேருந்துகளை இயக்குவதற்கு உரிய ஆணைகளை வழங்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கு மாற்று வழி இல்லாமல் நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் நோய்தொற்று பரவல்
கட்டுக்கடங்காமல் சென்றுவிட வாய்ப்புள்ளது என்ற எங்களுடைய நியாயமான அச்சத்தை உங்கள் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம். இது விஷயமாக உடனடியாக போக்குவரத்து துறையுடன் கலந்தாலோசித்து இந்த இக்கட்டான காலகட்டத்தில் போக்குவரத்து துறையின் லாப நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல் மேலும் அதிகப்படியான பேருந்துகளை இயக்கி உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை விஸ்வரூபம் எடுக்காமல் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருமுன் காத்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் படிக்க