June 5, 2020
தண்டோரா குழு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் மரம் நடு விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி.பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தொடர்ந்து அவர் பேசுகையில்
பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும்,சுற்றுச்சூழல் துறையின் அவசியத்தை தற்போது பொதுமக்கள் உணர்ந்து வருவதாகவும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, எங்களது மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் மறுசுழற்சி,மூலிகை தோட்டக்கலை பராமரிப்பு,மற்றும் பசுமை மரங்கள் வளர்ப்பு என சுற்றுச்சூழல் துறையில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் டாக்டர் மாதவன்,பழனிசாமி,மருத்துவர் பாலு,தோட்ட பராமரிப்பாளர் வெங்கடாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.