June 5, 2020
தண்டோரா குழு
திமுகவினர் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதாக குற்றம்சாட்டி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தூண்டுதலால் திமுகவினர் மீது இதுபோன்ற பொய்வழக்குகள் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிமனித இடைவெளி விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.