June 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 28 நாட்களுக்கு கடந்த 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், கோவையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்
இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாகவும் நேற்று சுகாதாரத்துறை அறிவித்தது. கோவையில் நேற்றைய பாதிப்பு -161
என்ற நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 என தெரிவித்துள்ளது. இன்றைய கணக்கின் படி 8 பேர் மாயமாகி யுள்ளனர். இதனால் கோவை மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஏற்கனவே மொத்த பாதிப்பிற்கும், குணமடைந்தவர்கள், உயிரிழந்தோர் எண்ணிக்கைக்கும் ஒரு எண் குறைவாகவே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.