June 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,373. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில்
11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம்,இன்று ஒரேநாளில் 585 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,901 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 12,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 15,991 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,20,286 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.