June 3, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது. கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில் 28 நாட்களுக்கு நேற்று முன்தினம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,கோவையில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பேர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.