June 3, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,244. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது. இது அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 11 பேர் பலியானதைத்தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,316 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 11,345 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 4 ஆம் நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.